/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஜெகன்னாதபுரம் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம் ஜெகன்னாதபுரம் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
ஜெகன்னாதபுரம் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
ஜெகன்னாதபுரம் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
ஜெகன்னாதபுரம் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 02, 2025 02:55 AM

சோழவரம்:சாலையோரத்தில் மொபைல்போன் டவருக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாத நிலையில், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜெகன்னாதபுரம் கிராமத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனத்தின் மொபைல்போன் டவர் அமைக்க திட்டமிடப்பட்டது.
கட்டுமான பணிகளுக்காக, 20 அடி ஆழத்தில் பெரிய குழி வெட்டப்பட்டது.
அங்கு, ஏற்கனவே மொபைல்போன் டவர் இருப்பதால், புதிதாக அமைக்கக் கூடாது என, கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, புதிய மொபைல்போன் டவர் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், டவர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம், தற்போது வரை மூடப்படாமல் திறந்தநிலையில் உள்ளது.
இதனால், மழைக்காலங்களில் பள்ளத்தில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது.
குடியிருப்புகளின் அருகிலும், அழிஞ்சிவாக்கம் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையை ஒட்டியும் பள்ளம் இருப்பதால், விபத்து அபாயம் நிலவி வருகிறது.
எனவே, அசம்பாவிதங்கள் நேரிடும் முன், இந்த பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.