/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இணைப்பு சாலையை தவிர்க்கும் பஸ்கள் விபத்து அச்சத்தில் பயணியர் காத்திருப்பு இணைப்பு சாலையை தவிர்க்கும் பஸ்கள் விபத்து அச்சத்தில் பயணியர் காத்திருப்பு
இணைப்பு சாலையை தவிர்க்கும் பஸ்கள் விபத்து அச்சத்தில் பயணியர் காத்திருப்பு
இணைப்பு சாலையை தவிர்க்கும் பஸ்கள் விபத்து அச்சத்தில் பயணியர் காத்திருப்பு
இணைப்பு சாலையை தவிர்க்கும் பஸ்கள் விபத்து அச்சத்தில் பயணியர் காத்திருப்பு
ADDED : ஜூலை 02, 2025 02:56 AM

கும்மிடிப்பூண்டி:இணைப்பு சாலை வழியாக சென்று வருவதை பேருந்துகள் தவிர்த்து வருவதால், தேசிய நெடுஞ்சாலையோரம், விபத்து அச்சத்தில் ஆபத்தாக காத்திருக்க வேண்டிய நிலைக்கு பயணியர் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அருகே புதுவாயல் சந்திப்பு பேருந்து நிறுத்தம் உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், சிறுவாபுரி மற்றும் பெரியபாளையம் கோவில் பக்தர்கள் என, தினமும் பல்லாயிரக்கணக்கான பேருந்து பயணியர் கூடும் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது.
இந்த சந்திப்பில் உள்ள இருபுற இணைப்பு சாலைகளை பேருந்துகள் தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலையில் சென்று வருகின்றன.
இதனால், சென்னை மற்றும் ஆந்திரா ஆகிய இரு மார்க்கமாக செல்லும் பயணியர், ஆபத்தான நிலையில் தேசிய நெடுஞ்சாலையோரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பேருந்தில் இருந்து இறங்கும் பயணியரும், பேருந்தை பிடிக்க அவசரமாக வரும் பயணியரும், ஆபத்தாக தேசிய நெடுஞ்சாலையை கடப்பதால், அப்பகுதி விபத்து ஏற்படும் பகுதியாக மாறி வருகிறது.
எனவே, பயணியரின் பாதுகாப்பு கருதி, சென்னை மற்றும் ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்தும், இணைப்பு சாலைகள் வழியாக இயக்க வேண்டும். அதற்கு, கவரைப்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.