/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின் இணைப்பு இல்லாததால் திறக்கப்படாத ரேஷன் கடை மின் இணைப்பு இல்லாததால் திறக்கப்படாத ரேஷன் கடை
மின் இணைப்பு இல்லாததால் திறக்கப்படாத ரேஷன் கடை
மின் இணைப்பு இல்லாததால் திறக்கப்படாத ரேஷன் கடை
மின் இணைப்பு இல்லாததால் திறக்கப்படாத ரேஷன் கடை
ADDED : மார் 25, 2025 07:39 AM

திருத்தணி : திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாமல், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2023 - 24ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், அகூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் பணி துவக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன் பணிகள் முழுமையாக முடிந்தும், புதிய ரேஷன் கடை கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.
இதற்கு காரணம், புதிய ரேஷன் கடைக்கு தற்போது வரை மின் இணைப்பு பெறாததால், ரேஷன் கடை திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
ஊராட்சி நிர்வாகம், மின் இணைப்பு பெறுவதற்கு முயற்சி எடுக்கவில்லை என, அகூர் கிராமவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், ரேஷன் கடை வாடகை கட்டடத்தில், குறுகிய இடத்தில் இயங்கி வருவதால், ரேஷன் பொருட்கள் வாங்க மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, அகூர் புதிய ரேஷன் கடை கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்கி, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.