/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்' குண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
குண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
குண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
குண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : மார் 25, 2025 07:39 AM

கும்மிடிப்பூண்டி : சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் பகுதியில், எப்போது மழை பெய்தாலும், தேசிய நெடுஞ்சாலையிலும், அதை ஒட்டிள்ள இணைப்பு சாலையிலும் குளம் போல் மழைநீர் தேங்குவது வழக்கம்.
அப்பகுதி தாழ்வாக இருப்பதால், அங்கு மழைநீர் வடிகால்வாய் இருந்தும் பயனில்லை என்ற நிலை தொடர்கிறது.
மழைநீர் தேங்குவதால், இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இரு நாட்களுக்கு முன் பெய்த சிறு மழைக்கே, அந்த இணைப்பு சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
பள்ளம் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும். அப்பகுதியில் மழைநீர் வடிந்து செல்லவதற்கு ஏற்ப வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.