/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரேஷன் கடை கட்டுமான பணிகள் மணல், செங்கல் தரம் கேள்விக்குறி ரேஷன் கடை கட்டுமான பணிகள் மணல், செங்கல் தரம் கேள்விக்குறி
ரேஷன் கடை கட்டுமான பணிகள் மணல், செங்கல் தரம் கேள்விக்குறி
ரேஷன் கடை கட்டுமான பணிகள் மணல், செங்கல் தரம் கேள்விக்குறி
ரேஷன் கடை கட்டுமான பணிகள் மணல், செங்கல் தரம் கேள்விக்குறி
ADDED : செப் 21, 2025 11:48 PM

வெள்ளேரிதாங்கல்;வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில் தரமற்ற முறையில் ரேஷன் கடை கட்டட பணி நடந்து வருவதாக, பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில் ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. பழைய கட்டடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிதாக கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி, சில நாட்களுக்கு முன் துவங்கியது.
இந்த கட்டுமான பணியில் செங்கல், மணல், இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக, பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஒன்றிய அலுவலர் கூறுகையில், 'வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில், புதிய ரேஷன் கடை கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.