/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் சேதம்பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் சேதம்
பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் சேதம்
பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் சேதம்
பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் சேதம்
ADDED : பிப் 05, 2024 11:17 PM

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
இந்த சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியருக்கு பிரசவம் மற்றும் புறநோயாளிகளுக்கு பொது சிகிச்சைகள் தினசரி அளிக்கப்படுகின்றன.
இந்த சுகாதார நிலையத்தில், 24 மணி நேரமும் தொடர்ந்து மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தங்கியிருந்து சிகிச்சை அளிக்கின்றனர். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சுற்றுச்சுவர், சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை சீரமைக்கவில்லை.
இதனால், பகல் மற்றும் இரவு நேரத்தில் சுகாதார நிலையத்திற்குள் சில சமூக விரோதிகள் புகுந்து, தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், கால்நடைகளும் சுகாதார நிலையத்திற்குள் புகுந்து ஓய்வு எடுக்கின்றன.
எனவே மாவட்ட நிர்வாகம், பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து, சுற்றுசுவரை சீரமைப்பதுடன் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.