/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குளமாக மாறிய பூந்தமல்லி நெடுஞ்சாலை தத்தளித்து செல்லும் வாகனங்களால் சிரமம் குளமாக மாறிய பூந்தமல்லி நெடுஞ்சாலை தத்தளித்து செல்லும் வாகனங்களால் சிரமம்
குளமாக மாறிய பூந்தமல்லி நெடுஞ்சாலை தத்தளித்து செல்லும் வாகனங்களால் சிரமம்
குளமாக மாறிய பூந்தமல்லி நெடுஞ்சாலை தத்தளித்து செல்லும் வாகனங்களால் சிரமம்
குளமாக மாறிய பூந்தமல்லி நெடுஞ்சாலை தத்தளித்து செல்லும் வாகனங்களால் சிரமம்
ADDED : செப் 02, 2025 12:47 AM

திருமழிசை, குளமாக மாறிய பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
திருமழிசை பகுதியிலிருந்து காவல்சேரி, கோளப்பன்சேரி, பாரிவாக்கம், பாணவேடுதோட்டம், வயலாநல்லுார் வழியாக பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியே தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில் கோளப்பன்சேரி பகுதியில் சாலையோரம் மழைநீர் கால்வாய் இல்லாததால் நெடுஞ்சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமபட்டு சென்று வருகின்றனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதோடு விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நெடுஞ்சாலையை சீரமைக்கவும், மழைநீர் கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-----------------