/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/புட்லுார் ஏரிக்கரை சேதம் சீரமைக்க மக்கள் கோரிக்கைபுட்லுார் ஏரிக்கரை சேதம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
புட்லுார் ஏரிக்கரை சேதம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
புட்லுார் ஏரிக்கரை சேதம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
புட்லுார் ஏரிக்கரை சேதம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 05, 2024 08:23 PM
திருவள்ளூர்:புட்லுார், ஏரிக்கரை உடைப்பை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில், பொதுப்பணி துறையினருக்கு மனு அளிக்கப்பட்டு உள்ளது.
புட்லுார் கிராமத்தைச் சேர்ந்த, செந்தில்குமார் என்பவர், பொதுமக்கள் சார்பாக, திருவள்ளூர் பொதுப்பணி துறையினருக்கு அளித்துள்ள மனு:
திருவள்ளூர் ஒன்றியம், புட்லுார் ஊராட்சியில், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரியில் நீர் நிரம்பி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ஏரிக்கரை அருகில், உபரி நீர் வெளியேறும் கலங்கல் அருகில், சமூக விரோதிகள் சிலர், மண்ணை வெட்டி எடுத்துச் சென்றதால், கரை பலவீனமாக உள்ளது.
பேரிடர் காலத்தில் கரை உடைப்பு ஏற்பட்டால், ஏரியில் உள்ள தண்ணீர் வெளியேறி, அருகில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து, பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, ஏரி கலங்கலை சீர்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மனுவிற்கு, திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணிதிலகம் அளித்துள்ள பதிலில், 'திருவள்ளூர் தாசில்தாரிடம், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து, நில அளவை செய்து கொடுக்க கோரப்பட்டுள்ளது.
விபரம் பெறப்பட்டவுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். மேலும், கரையை பலப்படுத்த, அரசிடம் இருந்து சிறப்பு நிதி பெறப்பட்டு, பணி மேற்கொள்ளப்படும்' என கூறப்பட்டுள்ளது.