ஒரு துப்பாக்கியும், 4 தோட்டாக்களும்...! மருமகன் மர்டரில் மாஜி போலீசின் 'மாஸ்டர்' பிளான் ...!
ஒரு துப்பாக்கியும், 4 தோட்டாக்களும்...! மருமகன் மர்டரில் மாஜி போலீசின் 'மாஸ்டர்' பிளான் ...!
ஒரு துப்பாக்கியும், 4 தோட்டாக்களும்...! மருமகன் மர்டரில் மாஜி போலீசின் 'மாஸ்டர்' பிளான் ...!

திருமண வாழ்க்கை
வரதட்சணை கொடுமை
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர் ஹர்ப்ரீத் சிங், மாமியார் உள்ளிட்டோர் மீது அமிதோஜ் புகார் அளிக்க, இந்த விவகாரம் விவாகரத்து வழக்காக உருப்பெற்று சண்டிகர் மாவட்ட கோர்ட் வரை சென்றது. சம்பவத்தன்று, இந்த வழக்கு விசாரணை, கோர்ட்டில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்தது.
மத்தியஸ்தம்
இரு குடும்பத்தினரும் கோர்ட்டில் ஆஜராகினர். மருமகன் ஹர்ப்ரீத் சிங், தனது பெற்றோருடன் வந்திருந்தார். அமிதோஜ் கனடாவில் இருந்ததால் அவரது தந்தை மல்வீந்தர்சிங் சித்து மட்டும் வந்திருந்தார். மத்தியஸ்தம் காரசாரமாக நடந்து கொண்டிருக்க தாம் யார் என்று காட்டுகிறேன் என்று ஹர்ப்ரீத் சிங் கூறியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்து அந்த இடமே களேபரமாகியது.
ரிவால்வர்
ஒருகட்டத்தில் மல்வீந்தர்சிங் சித்து கழிவறை செல்ல எழ, அப்போதும் விடாமல் மருமகன் ஹர்ப்ரீத் சிங் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவரும் மாறி, மாறி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோது 'டக்'கென்று தாம் வைத்திருந்த ரிவால்வரை கையில் எடுத்த மல்வீந்தர்சிங் சித்து, நேருக்கு நேராக நின்றபடியே ஹர்ப்ரீத் சிங்கை 4 முறை சுட்டுள்ளார். அதில் 2 தோட்டாக்கள் ஹர்ப்ரீத் சிங் நெஞ்சை துளைக்க, அங்கேயே அவர் சுருண்டு விழுந்தார்.
தெறித்து ஓடிய பலர்
நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த சம்பவம், கோர்ட்டில் உள்ளவர்களை ஒரு கணம் அதிர்ச்சி அடைய வைக்க, என்ன நடந்தது என்று புரியாமல் பலரும் ஆளுக்கு ஒரு திசையில் தெறித்து ஓட ஆரம்பித்தனர். பெற்றோர் மற்றும் வக்கீல்கள் உதவியுடன் ஹர்ப்ரீத் சிங் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
திட்டமிட்டே கொலை
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, கோர்ட்டில் வைத்தே போலீசார் மல்விந்தர்சிங் சித்துவை கைது செய்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஏதோ தற்செயலாக வாக்குவாதத்தின் போது நிகழ்ந்த துப்பாக்சிச்சூடு சம்பவமாக தெரியவில்லை, திட்டமிட்டே கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் துப்பாக்கியைக் கொண்டு வந்திருந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.