/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஏரியை ஒட்டியுள்ள பாலத்தில் தடுப்பு இன்றி மக்கள் அச்சம் ஏரியை ஒட்டியுள்ள பாலத்தில் தடுப்பு இன்றி மக்கள் அச்சம்
ஏரியை ஒட்டியுள்ள பாலத்தில் தடுப்பு இன்றி மக்கள் அச்சம்
ஏரியை ஒட்டியுள்ள பாலத்தில் தடுப்பு இன்றி மக்கள் அச்சம்
ஏரியை ஒட்டியுள்ள பாலத்தில் தடுப்பு இன்றி மக்கள் அச்சம்
ADDED : மே 23, 2025 10:50 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ரயில்வே மேம்பாலம் வழியாக சுண்ணாம்புகுளம் கிராமம் வரை செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது.
இச்சாலையில், முல்லைவாயல்மேடு கிராம எல்லையில், ஓட்டேரி என்ற பெயரில் பரந்து விரிந்த நீர்வளத்துறை ஏரி அமைந்துள்ளது. இச்சாலையின் குறுக்கே உபரிநீர் கால்வாய் செல்லும் இடத்தில் சிறுபாலம் உள்ளது.
இந்த பாலத்தின் ஓரம் தடுப்பின்றி இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் சற்று கவனம் சிதறினாலும், ஏரிக்குள் வாகனத்துடன் கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, மாநில நெடுஞ்சாலை துறையினர், பாலத்தில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். அதுவரை வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையிலான ஒளிரும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.