/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெற்களமாக மாறிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம் நெற்களமாக மாறிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
நெற்களமாக மாறிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
நெற்களமாக மாறிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
நெற்களமாக மாறிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
ADDED : மே 23, 2025 10:49 PM

திருவாலங்காடு:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் அருகே காஞ்சிப்பாடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விவசாயம் செய்கின்றனர்.
விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை உலர்த்துவதற்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் நெற்களம் அமைக்கப்பட்டது. இந்த நெற்களம் முறையாக பராமரிக்காததால் சேதமடைந்துள்ளது.
இதனால், சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை கொட்டி, பாதுகாப்பாக தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். இந்த சாலை வழியாக 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வரும் நிலையில், தற்போது விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நெடுஞ்சாலையில் நெல் கொட்டுவதை தடுத்து, புதிய நெற்களம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.