/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கழிப்பறைக்கு சென்ற நோயாளி உயிரிழப்பு கழிப்பறைக்கு சென்ற நோயாளி உயிரிழப்பு
கழிப்பறைக்கு சென்ற நோயாளி உயிரிழப்பு
கழிப்பறைக்கு சென்ற நோயாளி உயிரிழப்பு
கழிப்பறைக்கு சென்ற நோயாளி உயிரிழப்பு
ADDED : செப் 12, 2025 10:38 PM
திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனையில், கழிப்பறைக்கு சென்ற நோயாளி உயிரிழந்தார்.
திருத்தணி நகரம் அக்கைய நாயுடு தெருவைச் சேர்ந்தவர் காலேஷா, 60. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். பின், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க மருத்துவமனை கழிப்பறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வார்டுக்கு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், கழிப்பறைக்கு சென்று பார்த்த போது, காலேஷா இறந்து கிடந்துள்ளார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.