/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் பாப்பரம்பாக்கம் மக்கள் மனு அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் பாப்பரம்பாக்கம் மக்கள் மனு
அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் பாப்பரம்பாக்கம் மக்கள் மனு
அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் பாப்பரம்பாக்கம் மக்கள் மனு
அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் பாப்பரம்பாக்கம் மக்கள் மனு
ADDED : ஜூன் 26, 2025 09:35 PM
திருவள்ளூர்:பாப்பரம்பாக்கம் உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டுமென என, கிராமவாசிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கடம்பத்துார் ஒன்றியம், பாப்பரப்பாக்கம் கிராமவாசிகள் திருவள்ளூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
பாப்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை, 200 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். தற்போது. இப்பள்ளியில் இடநெருக்கடி ஏற்பட்டு, மாணவ - மாணவியர் கல்வி கற்க சிரமப்படுகின்றனர். இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டித்தர வேண்டும்.
வகுப்பறைகளுக்கு கூடுதலாக இருக்கை, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. இதையும் மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து பெற்று, சீரமைக்க வேண்டும்.
இப்பள்ளிக்கு தனியார் நிறுவனம் ஒன்று, தங்களின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து தேவையான வசதியை செய்துதர தயாராக உள்ளது.
எனவே, எங்கள் பள்ளிக்கு தேவையான கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற கலெக்டர், 'சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் ஆலோசித்து, கூடுதல் கட்டடம் கட்டித்தர ஏற்பாடு செய்து தரப்படும்' என உறுதியளித்தார்.