/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சமூக பொறுப்புணர்வு நிறுவனங்களுக்கு விருது சமூக பொறுப்புணர்வு நிறுவனங்களுக்கு விருது
சமூக பொறுப்புணர்வு நிறுவனங்களுக்கு விருது
சமூக பொறுப்புணர்வு நிறுவனங்களுக்கு விருது
சமூக பொறுப்புணர்வு நிறுவனங்களுக்கு விருது
ADDED : ஜூன் 26, 2025 09:37 PM
திருவள்ளூர்:சமூக பொறுப்புணர்வு கொண்ட சிறந்த நிறுவனங்களுக்கு விருது வழங்க, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களை சிறப்பிக்கும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு நிறுவனம் வீதம், 1 லட்சம் ரூபாய் பரிசுடன் விருது வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், சமூக பொறுப்புணர்வுடன் ஆற்றிய சேவைகளை கருத்தில் கொண்டு, விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்.
திருவள்ளூர் மாவட்ட ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்குவதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும். நிறுவனங்களின் கடந்த நிதியாண்டின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்விருதுக்கு www.tnrd.tngov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். தகுதிவாய்ந்த நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பத்தை, தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்ட 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.