/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் இன்று துவக்கம் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
ADDED : மார் 22, 2025 11:40 PM
திருவள்ளூர். திருவள்ளூரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, இன்று விக்னேஸ்வரர் உற்சவத்துடன் துவங்கி, ஏப்., 3 வரை 12 நாட்கள் நடக்கிறது. காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா வருவார்.
தொடர்ந்து, 12 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை வேதபாராயணமும், 30ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருமுறை திருவிழாவும் நடைபெறுகிறது.
உற்சவ விவரம்:
நாள் உற்சவம்
மார்ச் 23 விக்னேஸ்வரர் உற்சவம், மாலை 6:00 மணி
24 கொடியேற்றம், காலை 6:00 மணி, சிம்ம வாகனம், இரவு 7:00 மணி
25 ஹம்சவாகனம், காலை 7:30 மணி, சூரிய பிரபை, இரவு 7:00 மணி
26 பூதவாகனம், காலை 7:30 மணி, அதிகார நந்தி சேவை, இரவு 7:00 மணி
27 நாகவாகனம், காலை 7:30 மணி, சந்திரபிரபை, இரவு 7:00 மணி
28 மயில் வாகனம், காலை 7:30 மணி, ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி தரிசனம், இரவு 7:00 மணி
29 அஸ்மான கிரி வாகனம், காலை 7:30 மணி, யானை வாகனம், இரவு 7:00 மணி
30 ரத உற்சவம், காலை 7:30 மணி, தடாக பிரதட்சனம், இரவு 7:00 மணி
31 பிச்சாடனர் உற்சவம், காலை 7:30 மணி, திருக்கல்யாணம், இரவு 7:00 மணி, குதிரை வாகனம், இரவு 9:00 மணி
ஏப்., 1 சிவிகை பல்லக்கு, காலை 7:30 மணி, புஷ்ப பல்லக்கு, இரவு 7:00 மணி
2 நடராஜர் அபிஷேகம், விமானம், தீர்த்தவாரி, காலை 8:00 மணி, ராவணேஸ்வர வாகனம், இரவு 7:00 மணி, துவஜா அவரோஹணம், 8:00 மணி
3 மஹா அபிஷேகம், காலை 10:00 மணி, தொட்டி உற்சவம், பந்தம்பரி, இரவு 6:00 மணி.