/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மதுக்கூடமாக மாறி வரும் கண்ணம்பாக்கம் நெற்களம் மதுக்கூடமாக மாறி வரும் கண்ணம்பாக்கம் நெற்களம்
மதுக்கூடமாக மாறி வரும் கண்ணம்பாக்கம் நெற்களம்
மதுக்கூடமாக மாறி வரும் கண்ணம்பாக்கம் நெற்களம்
மதுக்கூடமாக மாறி வரும் கண்ணம்பாக்கம் நெற்களம்
ADDED : மார் 22, 2025 11:39 PM

கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ளது, கண்ணம்பாக்கம் கிராமம். அங்கிருந்து, ஆந்திரா நோக்கி செல்லும் சாலையோரம் நெற்களம் அமைந்துள்ளது.
விவசாயிகள் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்ட நெற்களம், 'குடி'மகன்களின் புகழிடமாக மாறி வருகிறது. இரவு நேரத்தில், மது பாட்டில்களுடன் பலர் அங்கு படையெடுத்து வருகின்றனர். மறுநாள் காலை நெற்களம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலி மது பாட்டில்கள் சூழ்ந்து காணப்படுவது வாடிக்கையாகி போனது.
மேலும், இரவு நேரங்களில் குடிபோதை தகராறுகளும், அடிதடிகளும் அதிகரித்து வருதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள பகுதி என்பதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க கண்ணம்பாக்கம் கிராமத்தில், பாதிரிவேடு போலீசார், முறையாக கண்காணிக்க வேண்டும்.
மேலும், நெற்களம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.