/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பள்ளிப்பட்டில் புதிய கோர்ட் திறப்புபள்ளிப்பட்டில் புதிய கோர்ட் திறப்பு
பள்ளிப்பட்டில் புதிய கோர்ட் திறப்பு
பள்ளிப்பட்டில் புதிய கோர்ட் திறப்பு
பள்ளிப்பட்டில் புதிய கோர்ட் திறப்பு
ADDED : பிப் 11, 2024 12:37 AM

பள்ளிப்பட்டு:பொதட்டூர்பேட்டை சாலையில், வனத்துறை அலுவலகம் அருகே பள்ளிப்பட்டில் புதிய கோர்ட் நேற்று திறந்து வைக்கப்பட்டது. பள்ளிபட்டில் வாடகை கட்டடத்தில் இயங்கும் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், தற்போது 5.76 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது.
ஐகோர்ட் நீதிபதிகள் வேல்முருகன், முகமது சபீக் ஆகியோர் புதிய கோர்ட் வளாகத்தை திறந்து வைத்தனர். இதில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் மற்றும் பள்ளிப்பட்டு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் பேசியதாவது:
பள்ளிப்பட்டு தாலுகா, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கோர்ட் வளாகம், இயற்கையான சூழலில் அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ளது.
இந்த வசதியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், பெரும்பாலான தாலுகாவில், வாடகை கட்டடங்களில் கோர்ட் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கோர்ட்களுக்கும், விரைவில் சொந்த கட்டடடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதி வேல்முருகன் பேசினார்.
சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்திலும், தற்போதையை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆட்சியிலும், இந்த அரசு, நீதித்துறைக்கு பக்கபலமாகவே இருந்து வருகிறது. நீதித்துறை சிறப்பாக செயல்பட தேவையான கட்டமைப்பு வசதி மற்றும் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருகிறது.
அனைத்து கோர்ட்களுக்கும் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி பேசினார்.
கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில், சென்னை- - -கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க, 6.31 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பொன்னேரி வட்டம், ஆரணி பிர்காவுக்கு உட்பட்ட அந்த இடத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் நிறுவ, 49.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், முகமது சபீக் தலைமையில் நடந்த நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.