லாரியின் பின்னால் மோதி ஒருவர் பலி
லாரியின் பின்னால் மோதி ஒருவர் பலி
லாரியின் பின்னால் மோதி ஒருவர் பலி
ADDED : ஜூன் 15, 2025 08:09 PM
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே சோம்பட்டு கிராமத்தில் வசித்தவர் விஜி, 45. நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டியில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, பன்பாக்கம் அருகே பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்னால் மோதியதில், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.