/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு
அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு
அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு
அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு
ADDED : ஜூன் 10, 2025 11:33 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் ஜெயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி, 38, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடன் தாய் சிவமணி, 57 மற்றும் சகோதரி காருண்யாவும் வசித்து வருகின்றனர்.
சென்னை பல்லாவாரத்தில் தங்கி தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் காயத்ரி கடந்த 31ம் தேதி வேலைக்கு சென்று விட்டார்.
காருண்யா கடந்த 12ம் தேதி மாதவரத்தில் தனியார் ஒருவரின் வீட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்று விட்டார்.
இருவரும் வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து தாயை பார்த்து செல்வர். தினமும் தாயாருடன் காயத்ரி மொபைல் போனில் பேசி வந்துள்ளார்
இந்நிலையில் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என, வந்தது.நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தாய் இறந்து அழுகிய நிலையில் கிடந்தது தெரிந்தது.
இதுகுறித்து காயத்ரி அளித்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.