/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் பெற அழைப்பு சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் பெற அழைப்பு
சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் பெற அழைப்பு
சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் பெற அழைப்பு
சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் பெற அழைப்பு
ADDED : ஜூன் 10, 2025 11:35 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வேளாண் துறையினர் தெளிப்பு நீர் பாசனம் மற்றும் சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் விலையில் மின்மோட்டார் மற்றும் பைப்கள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து திருத்தணி வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேளாண் துறையின் மூலம் தெளிப்பு நீர் பாசனத்திற்கு விவசாயிகளுக்கு புஞ்சை நிலம், 5 ஏக்கர் பரப்பிற்கும், நஞ்சை நிலம், இரண்டர ஏக்கர் பரப்பிற்கும் மின்மோட்டார் வாங்குவதற்கு, 15 ஆயிரம் ரூபாயும், பைப் வாங்குவதற்கு,10 ஆயிரம் ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது.
அதே போல் தோட்டக்கலை துறையின் மூலம் சொட்டுநீர் பாசனத்திற்கும், 5 ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு, பைப்கள் வாங்குவதற்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
எனவே விவசாயிகள் மானியம் பெறுவதற்கு, சிறு விவசாயி கார்டு, நிலத்தின் பட்டா, சிட்டா, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போட்டோவுடன் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து விவசாயிகள் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்