/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஜூன் 13, 2025 02:26 AM
ஊத்துக்கோட்டை:சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் 'நோட்டீஸ்' வழங்கியுள்ளது.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், சாலையில் இருபுறமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.
கால்நடை வளர்ப்பவர்கள் வீடுகளில் அவற்றை கட்டி போட்டு தீனி போடுவதில்லை. மாறாக சாலையில் திரிய விடுகின்றனர். மாடுகள் தீனிக்காக, அங்குள்ள பழம், பூ, காய்கறி கடைகளுக்கு செல்கின்றன. அப்போது வியாபாரிகள் அவற்றை துரத்தும்போது, பயத்தில் அவை ஓடுகின்றன. இதில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம், சாலையில் திரிய விடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிஉள்ளது.
அதில், ஒரு வாரத்திற்குள் மாடுகளை வீடுகளில் கட்டாமல் சாலையில் திரியவிட்டால், மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து நடவடிக்கை எடுக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.