/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா
அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா
அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா
அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா
ADDED : செப் 23, 2025 12:12 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் திரவுபதி அம்மன் கோவிலில், 91ம் ஆண்டு விஜயதசமி மற்றும் 52ம் ஆண்டு நவராத்திரி விழா இன்று துவங்குகிறது.
கடம்பத்துார் திரவுபதி அம்மன் கோவிலில், இந்த ஆண்டு விஜயதசமி மற்றும் நவராத்திரி விழா, இன்று முதல் வரும் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நவராத்திரி திருவிழாவான ஒன்பது நாட்களும், பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார். வரும் 5ம் தேதி விடையாத்தி உற்சவத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருக்கல்யாணம் கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துார் கிராமத்தில் அமைந்துள்ள ஏகாத்தம்மன் கோவிலில், 45வது நவராத்திரி பெருவிழா, நேற்று துவங்கி வரும் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இன்று இரவு 8:00 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும்.
அதேபோல், பொதட்டூர்பேட்டை பொன்னியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா நடைபெற்றது. இதில், காயத்ரி அலங்காரத்தில் பொன்னியம்மன் அருள்பாலித்தார்.
திருத்தணி திருத்தணி அடுத்த மத்துார் கிராமத்தில், முருகன் கோவிலின் துணை கோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று நவராத்திரி விழா துவங்கியது.
காலை 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகமும், மாலை நாணய அலங்காரமும் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு நவராத்திரி கொலு பொம்மைகள் அமைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. நவராத்திரி விழா, வரும் 7ம் தேதி வரை நடக்கிறது.
மாலை 6:00 - இரவு 7:00 மணி வரை நவராத்திரி கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் தினமும் நடைபெறும்.