ADDED : மே 31, 2025 11:28 PM
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில், கடந்த வாரம் அலுவலகத்தில் வைத்திருந்த, 1.70 லட்சம் ரூபாய் திருடு போனது. 'சிசிடிவி' கேமரா பதிவுகள் வாயிலாக தொழிற்சாலை நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டது.
இந்த திருட்டில் ஈடுபட்டது, ஹவுஸ் கீப்பிங் மேற்பார்வையாளரான, கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு, 24, என்பது தெரியவந்தது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில், தொழிற்சாலை நிர்வாகம் புகார் அளித்தது. வழக்கு பதிந்த போலீசார், சந்துருவை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 75,000 ரூபாயை மீட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.