Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரை மணி நேரம் பெய்த மழையால் 20 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு 10 கிராம மக்கள் தவிப்பு

அரை மணி நேரம் பெய்த மழையால் 20 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு 10 கிராம மக்கள் தவிப்பு

அரை மணி நேரம் பெய்த மழையால் 20 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு 10 கிராம மக்கள் தவிப்பு

அரை மணி நேரம் பெய்த மழையால் 20 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு 10 கிராம மக்கள் தவிப்பு

ADDED : மே 31, 2025 11:27 PM


Google News
திருத்தணி, திருத்தணி ஒன்றியம் தாடூர் எல்.என்.கண்டிகை, செருக்கனுார், மாம்பாக்கம், சாமந்திபுரம், ராமகிருஷ்ணாபுரம் உட்பட 10 கிராமங்களில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமங்களுக்கு கே.ஜி.கண்டிகை துணைமின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 4:30 முதல் மாலை 5:00 மணி வரை காற்றுடன் மழை பெய்தது.

இதையடுத்து, மேற்கண்ட கிராமங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. அதன்பின், நேற்று மதியம் முதல் 20 மணி நேரம் தொடர்ந்து மின் சப்ளை வழங்காததால், 10 கிராமங்களும் இருளில் மூழ்கின.

விவசாய மின்மோட்டார்கள் இயக்க முடியவில்லை. குடிநீர் மேல்நிலை தொட்டிகளுக்கும் தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், அத்தியாவசிய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், மின் சப்ளை வழங்காததால் கடும் அவதிப்பட்டனர்.

இதனால் மின் நுகர்வோர்கள், கே.ஜி.கண்டிகை மின்வாரிய அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து கே.ஜி.கண்டிகை துணை மின் நிலைய உயரதிகாரி கூறியதாவது:

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சவுக்கு மரங்கள், மா மரங்களின் கிளைகள் மின்கம்பிகள் மீது பட்டு, ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டதால், மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

இரவு, பகல் பாராமல், நேற்று முன்தினம் மாலை 6:30 முதல் நேற்று மதியம் 1:00 மணி வரை மின் ஊழியர்கள் மரக் கிளைகளை அப்புறப்படுத்தியதால், மதியம் 2:00 மணிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டது. மேலும், ஊழியர்கள் பற்றாக்குறையால் உடனுக்குடன் பணிகள் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us