/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெடுஞ்சாலை கால்வாய்களில் பராமரிப்பு பணிகள் மும்முரம் நெடுஞ்சாலை கால்வாய்களில் பராமரிப்பு பணிகள் மும்முரம்
நெடுஞ்சாலை கால்வாய்களில் பராமரிப்பு பணிகள் மும்முரம்
நெடுஞ்சாலை கால்வாய்களில் பராமரிப்பு பணிகள் மும்முரம்
நெடுஞ்சாலை கால்வாய்களில் பராமரிப்பு பணிகள் மும்முரம்
ADDED : செப் 10, 2025 09:46 PM
கும்மிடிப்பூண்டி:வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலை யோரம் உள்ள கால்வாய்களில், நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது.
இச்சாலையில், கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலம் துவங்கி, பஜார் பகுதி, ரெட்டம்பேடு சந்திப்பு, கோட்டக்கரை சந்திப்பு வழியாக, தேர்வழி சந்திப்பு வரையிலான சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைந்துள்ளது.
மழைக்காலங்களில், தண்ணீர் வடிந்து செல்வதில் தடங்கல் ஏற்பட்டு, சாலையோரம் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெடுஞ்சாலை துறையின் கண்காணிப்பு பொறியாளர் சரவணசெல்வன், கோட்ட பொறியாளர் சிற்றரசு ஆகியோர், கால்வாய்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப் பித்தனர்.
அதன்படி, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோர கால்வாய்களில், நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கால்வாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி துார்வாருவது, மழைநீர் தடையின்றி வடிந்து செல்ல வசதியாக தாழ்வான பகுதிகளில் வழிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட பணி களை, நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.