நாகாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
நாகாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
நாகாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 07, 2025 02:45 AM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு பஜார் தெரு விரிவாக்கத்தில் நாகாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் ஓராண்டாக நடந்து வந்தன. பக்தர்களின் பங்களிப்புடன் நடந்து வந்த புதுப்பித்தல் பணி, தற்போது நிறைவடைந்தது.
நேற்று முன்தினம் கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து, நான்கு கால பூஜைகள் நடந்து வந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பள்ளிப்பட்டு நகரைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.