/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஒரே நாளில் 130 திருமணங்கள் திருத்தணியில் குவிந்த பக்தர்கள் ஒரே நாளில் 130 திருமணங்கள் திருத்தணியில் குவிந்த பக்தர்கள்
ஒரே நாளில் 130 திருமணங்கள் திருத்தணியில் குவிந்த பக்தர்கள்
ஒரே நாளில் 130 திருமணங்கள் திருத்தணியில் குவிந்த பக்தர்கள்
ஒரே நாளில் 130 திருமணங்கள் திருத்தணியில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூன் 07, 2025 02:47 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை தலமாக உள்ளது. இங்கு, முகூர்த்த நாளில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். அன்றைய தினம் திருத்தணி கோவில் மற்றும் தனியார் மண்டபங்கள் நிரம்பி வழியும்.
நேற்று முகூர்த்த நாள் என்பதால், மலை மீதுள்ள முருகன் கோவில் மண்டபத்திலும், அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபங்களில், 130-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. மலைக்கோவிலில் உள்ள மண்டபத்தில் மட்டும், 72 திருமணங்கள் நடந்தன.
திருத்தணி முருகன் கோவில் மற்றும் தனியார் மண்டபங்களில், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த ஜோடிகள் திருமணம் செய்வதற்காக, குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்திருந்தனர். மேலும், முருகனை தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
இதனால், மலைக்கோவில் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.