/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கிருஷ்ணமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை கிருஷ்ணமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
கிருஷ்ணமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
கிருஷ்ணமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
கிருஷ்ணமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : செப் 14, 2025 11:17 PM

பொன்னேரி;திருவேங்கிடபுரம் தேவி கிருஷ்ணமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
பொன்னேரி அருகில் உள்ள திருவேங்கிடபுரத்தில், பிரசித்தி பெற்ற தேவி கிருஷ்ணமாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு விநாயகர், ஆஞ்சநேயர், துர்க்கை, சாமுண்டி, கவுமாரி, வைஷ்ணவி, மகேஸ்வரி ஆகிய சுவாமிகள், தனித்தனி சன்னிதிகளுடன் அமைந்துள்ளன.
இக்கோவில் வளாகம் சாலை மட்டத்தைவிட தாழ்வான நிலைக்கு சென்றதால், ஜாக்கிகள் உதவியுடன் 'லிப்டிங்' தொழில்நுட்பத்தில், 3 அடிக்கு உயர்த்தப்பட்டது. மற்ற சன்னிதிகளும் அதேபோல் உயர்த்தப்பட்டு, கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவில் திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேக விழா, கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து பூர்வாங்க பூஜைகள், அங்குரார்ப்பணம், யாகசாலை பரிவார பூஜைகள், கும்ப அலங்காரம், அஷ்டபந்தன சாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், மூன்று நாட்களாக நடைபெற்றன.
நேற்று காலை 7:30 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, அம்மன் சன்னிதி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மற்ற பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி, தீபாரானை நடந்தது. மாலை 5:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.