/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பதிவு எண் இல்லாத டிப்பர் லாரிகள் அதிகரிப்பு பதிவு எண் இல்லாத டிப்பர் லாரிகள் அதிகரிப்பு
பதிவு எண் இல்லாத டிப்பர் லாரிகள் அதிகரிப்பு
பதிவு எண் இல்லாத டிப்பர் லாரிகள் அதிகரிப்பு
பதிவு எண் இல்லாத டிப்பர் லாரிகள் அதிகரிப்பு
ADDED : மார் 22, 2025 11:45 PM

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த ஆந்திர மாநில பகுதியில், ஏராளமான மண் மற்றும் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு மண் மற்றும் பாறைகள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிப்பட்டு ஆர்.கே.பேட்டை தாலுகாவில் டிப்பர் லாரிகள் அதிகளவில் இயங்கி வருகின்றன. வழக்கமான வாகனங்களை விட உயரமான இந்த வாகனங்களால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு எதிரில் வரும் வாகனங்களை பார்க்க முடிவது இல்லை.
மேலும், தார்ப்பாய் மூடாமல் மண் ஏற்ற செல்லும் லாரிகளால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையில் எழும் புழுதியால் வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கிறது. இதனால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், டிப்பர் லாரிகளில் சில, வாகன பதிவு எண்ணும் இருப்பது இல்லை. அப்படியே இருந்தாலும், படிக்க முடியாத அளவிற்கு தெளிவின்றி புழுதி படிந்து காணப்படுகிறது. எனவே, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர், இந்த வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.