/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொது இடங்கள், பூங்காவில் பிளாஸ்டிக் அகற்ற விழிப்புணர்வு பொது இடங்கள், பூங்காவில் பிளாஸ்டிக் அகற்ற விழிப்புணர்வு
பொது இடங்கள், பூங்காவில் பிளாஸ்டிக் அகற்ற விழிப்புணர்வு
பொது இடங்கள், பூங்காவில் பிளாஸ்டிக் அகற்ற விழிப்புணர்வு
பொது இடங்கள், பூங்காவில் பிளாஸ்டிக் அகற்ற விழிப்புணர்வு
ADDED : மார் 22, 2025 11:45 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில், நேற்று மாவட்ட நிர்வாகமும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து, மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் துாய்மைப்படுத்தும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
பின் அவர் பேசியதாவது:
மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியம் ஆகிய துறைகள் இணைந்து, ஒவ்வொரு மாதமும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் துாய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நீர்நிலைகள், கோவில் வளாகங்களில் பிளாஸ்டிக் கழிவு அப்புறப்படுத்தப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இம்மாதம் திறந்தவெளி மற்றும் பூங்கா பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் துாய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, மாணவ - மாணவியர், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இப்பேரணி நடந்து வருகிறது. எனவே, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் போடுவதை தவிர்த்து, அதற்கான குப்பை தொட்டிகளில் போட்டு சுத்தமான சுகாதாரத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.