Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன மோசடியில் ஏஜன்டாக செயல்பட்டவர் காரில் கடத்தல்:ஆறு பேர் கும்பலுக்கு வலை

ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன மோசடியில் ஏஜன்டாக செயல்பட்டவர் காரில் கடத்தல்:ஆறு பேர் கும்பலுக்கு வலை

ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன மோசடியில் ஏஜன்டாக செயல்பட்டவர் காரில் கடத்தல்:ஆறு பேர் கும்பலுக்கு வலை

ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன மோசடியில் ஏஜன்டாக செயல்பட்டவர் காரில் கடத்தல்:ஆறு பேர் கும்பலுக்கு வலை

ADDED : ஜன 30, 2024 10:37 PM


Google News
Latest Tamil News
திருத்தணி:திருத்தணி அருகே பிட் காயின் மற்றும் ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில் ஏஜண்டாக செயல்பட்டு வந்தவரை, காரில் வந்த ஆறு மர்ம நபர்கள் பட்டப்பகலில் கடத்தி சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி, 43. இவர் நேற்று காலை 10:30 மணியளவில், அதே கிராமத்தில் பழமையான மண்டபத்தில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஆறு மர்ம நபர்கள். வெங்கடமுனியை கட்டாயப்படுத்தி ஏற்றினர்.

சிலர் தடுக்க முயன்ற போது, நான்கு பேர் பட்டா கத்தி மற்றும் வீச்சு அரிவாள் காட்டி மிரட்டியபடி, காரில் தப்பினர்.

சம்பவம் குறித்து அப்பகுதியினர் திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசார் நத்தம் கிராமத்திற்கு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். காரில் தப்பிய மர்ம நபர்களை இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில் வெங்கடமுனி ஏஜன்டாக செயல்பட்டு வந்துள்ளார். ஆன்லைன் மூலம் பிட் காயின் வாங்கித்தருவது, ஐ.எப்.எஸ்., நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைப்பதாக கூறி, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பல லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

நிதிநிறுவனத்தினர் மோசடி செய்ததை எடுத்து, முதலீடு செய்தவர்கள் வெங்கடமுனியிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் வெங்கடமுனியை கடத்தி இருக்கலாம் என கருதி, திருத்தணி போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக வட்டி தருவதாக கூறிய ஏஜென்ட்களை நம்பி ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

சுமார் 6,000 கோடி ரூபாய் வரை சுருட்டிய நிதி நிறுவன அதிபர்கள் லட்சுமிநாராயணன், மோகன்பாபு உள்ளிட்ட நான்கு பேர், துபாயில் வலம் வருவதாக செய்திகள் வலம் வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஏஜென்ட்கள் வாயிலாக மோசடி குறித்து, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து ஒராண்டுக்கு மேல் ஆகிறது. இதுவரை எந்த வித முன்னேற்றமும் இல்லை.

நிதி நிறுவன மோசடி சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்டவர்கள், ஏஜென்ட்கள் தற்கொலை செய்து கொள்ளுவதும், சில ஏஜென்ட்கள் கடத்தப்படும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us