/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை பூனை கடித்தாலும் 'ரேபிஸ்' நோய் பாதிக்கும் சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை பூனை கடித்தாலும் 'ரேபிஸ்' நோய் பாதிக்கும்
சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை பூனை கடித்தாலும் 'ரேபிஸ்' நோய் பாதிக்கும்
சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை பூனை கடித்தாலும் 'ரேபிஸ்' நோய் பாதிக்கும்
சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை பூனை கடித்தாலும் 'ரேபிஸ்' நோய் பாதிக்கும்
ADDED : ஜூன் 02, 2025 11:14 PM
திருவாலங்காடு :வெறி நாய்க்கடி நோய் அல்லது ரேபிஸ் நோய் என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நரம்பியல் வைரஸ் நோய். நாய், பூனை மற்றும் வன விலங்குகள் கடித்தால் அல்லது கீறல்களால் மனிதர்களுக்கு பரவும்.
ரேபிஸ் பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீர், மனிதர்களின் கண், வாய் அல்லது புண் வழியாக உடலுக்குள் செல்வதாலும் தொற்று ஏற்படலாம்.
ரேபிஸ் நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, கடித்த இடத்தில் வலி, குமட்டல், வாந்தி, சோர்வு, பதற்றம், சுயநினைவு இழப்பு, ஹைட்ரோபோபியா, வலிப்பு, மயக்கம் ஆகியவைகள் ஏற்படலாம்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:
வீட்டில் வளர்க்கும் பூனை, நாய் தானே என அலட்சியம் காட்டக் கூடாது. பூனை, நாய் போன்ற விலங்குகள் கடித்து விட்டால், உடனடியாக துணிகளை துவைக்க பயன்படும் சோப்பை கொண்டு, அந்த பகுதியை 15 நிமிடங்கள் வரை கண்டிப்பாக நன்கு கழுவ வேண்டும்.
உடனடியாக மருத்துவரை அணுகி உடனே ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். அலட்சியம் காட்டினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை ரேபிஸ் தடுப்பூசி போட்டு பாதுகாக்க வேண்டும்.
இந்த நோய்க்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.