/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மீனவரின் உடல் உறுப்பு தானத்தால் ஐந்து பேருக்கு மறுவாழ்வு மீனவரின் உடல் உறுப்பு தானத்தால் ஐந்து பேருக்கு மறுவாழ்வு
மீனவரின் உடல் உறுப்பு தானத்தால் ஐந்து பேருக்கு மறுவாழ்வு
மீனவரின் உடல் உறுப்பு தானத்தால் ஐந்து பேருக்கு மறுவாழ்வு
மீனவரின் உடல் உறுப்பு தானத்தால் ஐந்து பேருக்கு மறுவாழ்வு
ADDED : செப் 20, 2025 09:55 PM
சென்னை:விபத்தில் மூளைச்சாவு அடைந்த மீனவரின் உடல் உறுப்புகள் தானத்தால், ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அரங்கம் குப்பத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 40; மீனவர். இவரது மனைவி சாமந்தி. தம்பதிக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
கடந்த 16ம் தேதி காலை 8:30 மணியளவில், எண்ணுாரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சந்தோஷ் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தார். சந்தோஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.
இதையடுத்து, அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகம், கல்லீரல், இதயம் வால்வு, தோல் உள்ளிட்ட ஐந்து உறுப்புகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. பின், மருத்துவ குழுவினர் சந்தோஷின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர்.