/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரூ.25 லட்சம் இரும்பு திருடிய ஐவர் சிக்கினர் ரூ.25 லட்சம் இரும்பு திருடிய ஐவர் சிக்கினர்
ரூ.25 லட்சம் இரும்பு திருடிய ஐவர் சிக்கினர்
ரூ.25 லட்சம் இரும்பு திருடிய ஐவர் சிக்கினர்
ரூ.25 லட்சம் இரும்பு திருடிய ஐவர் சிக்கினர்
ADDED : செப் 15, 2025 12:50 AM
திருவள்ளூர்; கும்மிடிப்பூண்டி அடுத்த பாஞ்சாலை கிராமத்தில், 'சதன் அலாய்ஸ் பவுண்டரிஸ்' என்ற பெயரில் வாகன உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதன் உரிமையாளர், பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் விபரம்:
தொழிற்சாலை வளாகத்தில் இருந்த, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய இரும்புகள் திருடு போயின.
தொழிற்சாலை ஊழியர்களான, சென்னை பெரியமாத்துாரைச் சேர்ந்த நரேஷ், 29, மாதவரம் ரெஜி ஞானபிரகாசம், 40, சூரப்பட்டு ஜஸ்டின் துரை, 35, காரனோடை அழகேசன், 30, புதுப்பாளையம் ஜவஹர், 33, ஆகியோர் திருடியது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.