/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கும்மிடியில் மூதாட்டி தாக்கப்பட்ட சம்பவம்: ரூ.85 லட்சம் தப்பியது கும்மிடியில் மூதாட்டி தாக்கப்பட்ட சம்பவம்: ரூ.85 லட்சம் தப்பியது
கும்மிடியில் மூதாட்டி தாக்கப்பட்ட சம்பவம்: ரூ.85 லட்சம் தப்பியது
கும்மிடியில் மூதாட்டி தாக்கப்பட்ட சம்பவம்: ரூ.85 லட்சம் தப்பியது
கும்மிடியில் மூதாட்டி தாக்கப்பட்ட சம்பவம்: ரூ.85 லட்சம் தப்பியது
ADDED : செப் 12, 2025 10:33 PM
கும்மிடிப்பூண்டி:மூதாட்டியை தாக்கி நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளை நடந்த வீட்டில் நடத்திய சோதனையில், 11 இடங்களில் இருந்து, 85.60 லட்சம் ரூபாய் கண்டெடுக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 85. தனியாக வசித்து வருகிறார்.
கடந்த 11ம் தேதி மாலை, வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், மூதாட்டியின் தலையில் பலமாக தாக்கியதில் மயக்கமடைந்தார்.
அங்கிருந்த இரு பீரோக்களில் இருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
ஆபத்தான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், மூதாட்டி சிகிச்சை பெற்று வரும் நிலையில், 'கொள்ளை போன பொருட்கள் குறித்து விபரம் ஏதும் தெரியவில்லை' என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, கொள்ளை நடந்த வீட்டில், மூதாட்டியின் உறவினர் முன்னிலையில், போலீசார் நடத்திய சோதனையில், 11 இடங்களில் இருந்த துணி பைகளில், 85.60 லட்சம் ரூபாயை கண்டெடுத்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
'கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம், நகை கொள்ளை போயிருக்கக் கூடும்' என, உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கொள்ளையர்களை பிடிக்க, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ஜெய்ஸ்ரீ தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைத்து, தீவிர தேடுதலில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.