ADDED : செப் 07, 2025 10:18 PM
ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலம் சத்தியவேடு மண்டலம், ஆம்பா க்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பை யா, 86. இவர், நேற்று முன்தினம் மாலை பாலவாக்கம் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கரடிப்புத்துார் அருகே தும்பிகுளம் பகுதியில் நடந்து சென்றபோது, எதிரே வந்த பைக் மோதி யது. இதில் பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
பைக் ஓட்டுநர் தப்பியோடினார். ஊத்துக்கோட்டை போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திரு வள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசா ரித்து வருகின்றனர்.