/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/குடிநீர் ஏரிகளின் கையிருப்பு 6.19 டி.எம்.சி.,கை கொடுக்குமா?: கோடை மழையால் படிப்படியாக உயர்வுகுடிநீர் ஏரிகளின் கையிருப்பு 6.19 டி.எம்.சி.,கை கொடுக்குமா?: கோடை மழையால் படிப்படியாக உயர்வு
குடிநீர் ஏரிகளின் கையிருப்பு 6.19 டி.எம்.சி.,கை கொடுக்குமா?: கோடை மழையால் படிப்படியாக உயர்வு
குடிநீர் ஏரிகளின் கையிருப்பு 6.19 டி.எம்.சி.,கை கொடுக்குமா?: கோடை மழையால் படிப்படியாக உயர்வு
குடிநீர் ஏரிகளின் கையிருப்பு 6.19 டி.எம்.சி.,கை கொடுக்குமா?: கோடை மழையால் படிப்படியாக உயர்வு
ADDED : ஜூன் 14, 2024 01:02 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்துள்ளது. தற்போது, ஐந்து ஏரிகளில் 6.19 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ள நிலையில், தொடர் மழையால், நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு, தினமும் 100 கோடி லிட்டர் குடிநீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது.
மாநகரின் ஒரு மாதத்திற்கான குறைந்தபட்ச குடிநீர் தேவை, 1 டி.எம்.சி., இந்த குடிநீரை, சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும், பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகள் பூர்த்தி செய்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 13.22 டி.எம்.சி., ஆகும்.
பலத்த மழை
தற்போது, பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளான, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று காலை வரை, மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஆவடியில் 6.00 செ.மீட்டர், சோழவரத்தில் 3.5 செ.மீட்டர் மழை பதிவாகியது.
நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி பகுதிகளில் பலத்த மழையும், மாவட்டத்தின் இதர பகுதிகளில், மிதமான மழையும் பெய்து வருகிறது.
தொடர் மழையால், ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஆரணி, கொசஸ்தலை மற்றும் கூவம் ஆறுகளில், நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து, மழைநீர் வருவதால், தண்ணீர் வரத்து உள்ளது.
தொடர் மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களான பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை போன்றவைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. பூண்டியில், மொத்த கொள்ளளவான 3.231 டி.எம்.சி.,யில், 0.11 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ளது.
தண்ணீர் இருப்பு
இதேபோல், புழல் ஏரியில், 2.96 டி.எம்.சி., சோழவரத்தில், 0.11 டி.எம்.சி., கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில், 0.36 டி.எம்.சி., செம்பரம்பாக்கத்தில், 1.68 டி.எம்.சி., வீராணத்தில் 1.01 டி.எம்.சி., என்ற அளவில் தண்ணீர் இருப்பு உள்ளது.
இது, மொத்த கொள்ளளவான, 13.11 டி.எம்.சி.,யில், தற்போது 6.19 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 572, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 574 என, மொத்தம், 1,146 ஏரிகள் உள்ளன. இவற்றில், கோடை மழையால் படிப்படியாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகள் உள்பட, இதர ஏரி, குளங்களும் கோடை மழையால் நிரம்பி வருகின்றன.
தொடர்ந்து மழை பெய்யும்பட்சத்தில், பிரதான ஏரிகளின் நீர்இருப்பு உயரும் வாய்ப்பு உள்ளது. மேலும், இன்னும் மூன்று மாதங்களில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், பூண்டிக்கு கூடுதல் மழைநீர் கிடைக்கும்.
இதன் வாயிலாக, சென்னை நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு, கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளில் ஏற்படும்.
அந்த சமயத்தில், வெள்ளப்பெருக்கில் இருந்து சமாளிக்க, பொதுப்பணித் துறையினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
மேலும், பூண்டி நீர்த்தேக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அதிகளவில் தண்ணீர் வரும் பட்சத்தில் உபரிநீர், மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட பின், திறக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.
மழையளவு (செ.மீட்டரில்)
இடம் மழையளவு
ஆவடி 6.00
சோழவரம் 3.5
திருவள்ளூர் 3.02
செங்குன்றம் 2.80
தாமரைப்பாக்கம் 2.30
பூண்டி 2.10
கும்மிடிப்பூண்டி 1.80
பொன்னேரி 1.0
திருவாலங்காடு 1.50
திருத்தணி 1.70
தாமரைப்பாக்கம் 2.30
பூந்தமல்லி 0.70
ஜமீன் கொரட்டூர் 0.70
பள்ளிப்பட்டு 0.50
ஊத்துக்கோட்டை 0.30