/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணியில் 5 புது திருமண மண்டபங்கள் 4 மாதத்திற்குள் திறக்க திட்டம் திருத்தணியில் 5 புது திருமண மண்டபங்கள் 4 மாதத்திற்குள் திறக்க திட்டம்
திருத்தணியில் 5 புது திருமண மண்டபங்கள் 4 மாதத்திற்குள் திறக்க திட்டம்
திருத்தணியில் 5 புது திருமண மண்டபங்கள் 4 மாதத்திற்குள் திறக்க திட்டம்
திருத்தணியில் 5 புது திருமண மண்டபங்கள் 4 மாதத்திற்குள் திறக்க திட்டம்
ADDED : ஜூன் 14, 2024 12:59 AM
திருத்தணி:முருகன் கோவில் தலைமை அலுவலகம் அருகே, புதியதாக ஐந்து திருமண மண்டபங்கள், நிர்வாக பயிற்சி பள்ளி கட்டடம் மற்றும் கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் நாதஸ்வரம், இசை பயிற்சி பள்ளி ஆகியவை 48.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடப்பணிகள், கட்டப்படுகின்றன.
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.
இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தான விடுதிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், திருமண மண்டபங்கள் கோவில் நிர்வாகம் கட்டி குறைந்த வாடகையில் விடப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த, 2021ம் ஆண்டு செப்.30 ம் தேதி ஹிந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, அப்போதைய ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் முருகன் கோவில் தலைமை அலுவலகம் பின்புறம் காலியாக உள்ள காலியான இடத்தில் புதியதாக ஐந்து திருமண மண்டபங்கள், நிர்வாக பயிற்சி பள்ளி கட்டுவதற்கு தீர்மானித்தனர்.
மேலும் நந்தியாற்றின் கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் நாதஸ்வரம், இசை பயிற்சி பள்ளியும் ஏற்படுத்தவும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
இதையடுத்து மேற்கண்ட கட்டடங்களுக்கு மொத்தம், 48.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்தாண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கின.
நான்கு திருமண மண்டபங்கள், 100 பேர் அமரும் வகையிலும், 500 பேர் அமரக்கூடிய மற்றொரு திருமண மண்டபம் என மொத்தம், ஐந்து திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு, 22.50 கோடி ரூபாய், நிர்வாக பயிற்சி பள்ளி கட்டடத்திற்கு, 25 கோடி ரூபாய்.
நாதஸ்வரம், இசை பயிற்சி பள்ளிக்கு, 96 லட்சம் ரூபாய் என மொத்தம், 48.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டட பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ' புதிய கட்டட பணிகள் தற்போது, 75 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நான்கு மாதத்திற்குள் முழுமையாக முடித்து ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் அனுமதி பெற்ற பின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடவும் திட்டமிட்டுள்ளோம்'என்றார்.