/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/டி.ஜெ.எஸ்., மாணவர்கள் வில்வித்தையில் சாதனைடி.ஜெ.எஸ்., மாணவர்கள் வில்வித்தையில் சாதனை
டி.ஜெ.எஸ்., மாணவர்கள் வில்வித்தையில் சாதனை
டி.ஜெ.எஸ்., மாணவர்கள் வில்வித்தையில் சாதனை
டி.ஜெ.எஸ்., மாணவர்கள் வில்வித்தையில் சாதனை
ADDED : பிப் 23, 2024 10:45 PM

கும்மிடிப்பூண்டி:செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா வேல்ட் சிட்டியில், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான வில்வித்தை போட்டிகள் நடந்தன.
அதில், திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் டி.ஜெ.எஸ்., பப்ளிக் - சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள், பயிற்சியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பங்கேற்றனர்.
அந்த போட்டியில், பள்ளியில் பயிலும் தனுஸ்ரீ, 5, ஐந்து வயதுக்கு உட்பட்ட ரீகர்வ் வில்வித்தையில் தங்கம் வென்றார். மாணவன் யுவன், 13, 14 வயதுக்கு உட்பட்ட காம்பவுண்ட் வில்வித்தை பிரிவில் தங்கம் வென்றார். மாணவி சாருஹாசினி, 14, பதினான்கு வயதுக்கு உட்பட்ட சாதாரண வில்வித்தையில் வெண்கல பதக்கம் வென்றார்.
பதக்கங்கள் பெற்ற மூவரையும், கும்மிடிப்பூண்டி தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், டி.ஜெ.எஸ்., கல்வி குழும தலைவருமான டி.ஜெ.கோவிந்தராஜன், பள்ளியின் தாளாளர் தமிழரசன், முதல்வர் அசோக் ஆகியோர் பாராட்டினர்.