/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பைக் மீது பஸ் உரசியதால் தகராறு: ஓட்டுனர் உயிரிழப்பு பைக் மீது பஸ் உரசியதால் தகராறு: ஓட்டுனர் உயிரிழப்பு
பைக் மீது பஸ் உரசியதால் தகராறு: ஓட்டுனர் உயிரிழப்பு
பைக் மீது பஸ் உரசியதால் தகராறு: ஓட்டுனர் உயிரிழப்பு
பைக் மீது பஸ் உரசியதால் தகராறு: ஓட்டுனர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 13, 2025 09:40 PM
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்த பண்ணுார் அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண், 28. இவர், நேற்று மாலை குடும்பத்துடன் 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., சூப்பர்' பைக்கில், சுங்குவார்சத்திரம் சென்று விட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து, பைக் மீது உரசியது. இதில், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து, இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமடைந்து சென்றதாக கூறப்படுகிறது.
பண்ணுார் வந்த தனியார் தொழிற்சலை பேருந்தை வழிமறித்த அருணின் நண்பர்கள், ஓட்டுனரான காஞ்சிபுரம் பிச்சிவாக்கத்தைச் சேர்ந்த முரளி, 45, என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த முரளி, மப்பேடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல்சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி பலியானார். மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.