/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரம் இணைப்பு படி அமைக்கும் பணி துவக்கம் திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரம் இணைப்பு படி அமைக்கும் பணி துவக்கம்
திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரம் இணைப்பு படி அமைக்கும் பணி துவக்கம்
திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரம் இணைப்பு படி அமைக்கும் பணி துவக்கம்
திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரம் இணைப்பு படி அமைக்கும் பணி துவக்கம்
ADDED : செப் 11, 2025 03:19 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்தையும், தேர் வீதியையும் இணைக்கும் படிகள் அமைக்கும் பணிகள், 5.41 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில், 2009 நவ., 18ல், ஹிந்து அறநிலையத் துறை அனுமதியுடன், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் துவங்கியது.
கடந்த 2011க்குள் முடிக்க திட்டமிட்டிருந்த ராஜகோபுர பணிகள், பல்வேறு பிரச்னைகளால் கிடப்பில் போடப்பட்டு, 2017 ஏப்ரல்- மாதத்தில் பணிகள் துவங்கி, 2022 டிசம்பர் மாதம் ராஜகோபுரத்தின் ஒன்பது நிலைகள் கட்டப்பட்டு, சிற்பங்கள் ஏற்படுத்தி வண்ணம் தீட்டும் பணி நிறைவடைந்தது.
அதன்பின், ராஜகோபுரத்தையும், தேர் வீதியையும் இணைக்கும் படிகள் அமைக்கும் பணி, பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. கடந்த மாதம் 'மாஸ்டர் பிளான்' திட்டத்தின் கீழ், 54 படிகள் அமைப்பதற்கு, 5.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 'டெண்டர்' விடப்பட்டது.
தற்போது, ராஜகோபுரம் அருகே இணைப்பு படிகள் ஏற்படுத்த அடித்தளம் அமைக்கும் பணிகள் துவங்கியது.
இதுகுறித்து, திருத்தணி முருகன் கோவில் அதிகாரி கூறியதாவது:
முருகன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்திற்கும், தேர் வீதிக்கும் இடையே படிகள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. தற்போது, படிகள் அமைக்க ராஜகோபுரம் அருகே அஸ்திவாரம் போடப்பட்டு வருகிறது.
டிசம்பர் மாதத்திற்குள் இணைப்பு படிகள் ஏற்படுத்தி, ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.