/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆதிதிராவிட சமூகத்திற்கு ஒன்றிய பதவி தி.மு.க.,வில் வெடிக்குது பதவி போட்டி ஆதிதிராவிட சமூகத்திற்கு ஒன்றிய பதவி தி.மு.க.,வில் வெடிக்குது பதவி போட்டி
ஆதிதிராவிட சமூகத்திற்கு ஒன்றிய பதவி தி.மு.க.,வில் வெடிக்குது பதவி போட்டி
ஆதிதிராவிட சமூகத்திற்கு ஒன்றிய பதவி தி.மு.க.,வில் வெடிக்குது பதவி போட்டி
ஆதிதிராவிட சமூகத்திற்கு ஒன்றிய பதவி தி.மு.க.,வில் வெடிக்குது பதவி போட்டி
ADDED : ஜூன் 06, 2025 11:43 PM
திருத்தணி:வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து தி.மு.க., மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் திருத்தணியில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது.
கூட்டத்திற்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலர் திருத்தணி எம்.எல்.ஏ.,சந்திரன் தலைமை வகித்தார்.
அமைச்சர் நாசர் முன்னிலை வகித்தார். இதில், தி.மு.க., துணை பொதுச் செயலர் ராஜா எம்.பி., பங்கேற்று, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது, தி.மு.க., நிர்வாகிகள் ராஜாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
திருத்தணி சட்டசபை தொகுதியில், 2,80,706 ஓட்டுகளில், ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 75,000க்கும் மேல் ஓட்டுகள் உள்ளன.
இதில், 11 ஒன்றிய செயலர்கள், இரண்டு பேரூர் கழக செயலர்கள், ஒரு நகர கழக செயலராக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில், முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நான்கு பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழு பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மூன்று பேரும் ஒன்றிய, பேரூர், நகர செயலராக உள்ளனர். திருத்தணி ஒன்றியம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், மூன்று ஒன்றிய செயலர்கள் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவர் முதலியார் சமூகத்தை சேர்ந்தவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி கிழக்கு ஒன்றியத்தில், பெரும்பான்மையாக ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, திருத்தணி ஒன்றியத்தில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை, திருத்தணி ஒன்றிய செயலராக நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.