/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/போராட்டம் நடத்திய நெசவாளர்கள் மீது வழக்குபோராட்டம் நடத்திய நெசவாளர்கள் மீது வழக்கு
போராட்டம் நடத்திய நெசவாளர்கள் மீது வழக்கு
போராட்டம் நடத்திய நெசவாளர்கள் மீது வழக்கு
போராட்டம் நடத்திய நெசவாளர்கள் மீது வழக்கு
ADDED : பிப் 24, 2024 07:54 PM
பொதட்டூர்பேட்டை:கூலி உயர்வு கோரி, பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணி கோட்டாட்சியர் தலைமையில் நடந்த மூன்று கட்ட பேச்சிலும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், 22ம் தேதி இரவு பொதட்டூர்பேட்டை கலையரங்கில் ஏராளமான நெசவாளர்கள் ஒன்று கூடி, தொழில் நிலவரம் குறித்து விவாதித்தனர். இதை தொடர்ந்து திருத்தணி, பொதட்டூர் பேட்டையில் தொடர் போராட்டம் நடந்தது.
இது குறித்து முன் அனுமதி இன்றி பொது இடத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, பொதட்டூர்பேட்டை வி.ஏ.ஓ., வெங்கடேசன், பொதட்டூர் பேட்டைபோலீசில் புகார் செய்துள்ளார். பெண்கள் உட்பட 267 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.