/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொன்னேரி - பெரும்பேடு சாலையில் இடிந்து விழும் அபாய நிலையில் பாலம் பொன்னேரி - பெரும்பேடு சாலையில் இடிந்து விழும் அபாய நிலையில் பாலம்
பொன்னேரி - பெரும்பேடு சாலையில் இடிந்து விழும் அபாய நிலையில் பாலம்
பொன்னேரி - பெரும்பேடு சாலையில் இடிந்து விழும் அபாய நிலையில் பாலம்
பொன்னேரி - பெரும்பேடு சாலையில் இடிந்து விழும் அபாய நிலையில் பாலம்
ADDED : ஜூன் 19, 2025 02:13 AM

பொன்னேரி:பொன்னேரி - பெரும்பேடு சாலையில் சேதமடைந்தும், விரிசல்கள் ஏற்பட்டும், செடிகள் வளர்ந்துள்ள சிறுபாலத்தை புதுப்பிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொன்னேரி - பெரும்பேடு சாலையில், லட்சுமிபுரம் பகுதியில், கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் பராமரிப்பு இன்றி உள்ளது.
பாலத்தின் துாண்கள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், கான்கிரீட் கட்டுமானங்களில் செடிகள் வளர்ந்து, பாலத்தின் உறுதிதன்மை கேள்விக்குறியாகி வருகிறது.
பெரும்பேடு, கம்மவார்பாளையம், மத்ராவேடு, அரவாக்கம் என, 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் பிரதான போக்குவரத்துக்கு இப்பாலம் பயன்பட்டு வருகிறது.
செங்கல் சூளைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், அரசு பேருந்துகள், தனியார் பள்ளி வாகனங்கள் என, எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
பராமரிப்பு இல்லாமல் பாலம் பலவீனம் அடைந்து வருவதால், கிராமவாசிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
எனவே, பாலம் முழுமையாக சேதமடைந்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, அதை புதுப்பிக்க அல்லது புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.