/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அழுதாரெட்டிகண்டிகை ஏரி உபரிநீர் சிமென்ட் சாலையில் தேங்கும் அவலம் அழுதாரெட்டிகண்டிகை ஏரி உபரிநீர் சிமென்ட் சாலையில் தேங்கும் அவலம்
அழுதாரெட்டிகண்டிகை ஏரி உபரிநீர் சிமென்ட் சாலையில் தேங்கும் அவலம்
அழுதாரெட்டிகண்டிகை ஏரி உபரிநீர் சிமென்ட் சாலையில் தேங்கும் அவலம்
அழுதாரெட்டிகண்டிகை ஏரி உபரிநீர் சிமென்ட் சாலையில் தேங்கும் அவலம்
ADDED : ஜன 08, 2025 12:46 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது அமுதாரெட்டி கண்டிகை. இந்த கிராமத்தில், 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தின் தென்மேற்கில் செல்லாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தெற்கில் ஸ்ரீகாளிகாபுரம் ஏரியும், வடக்கில் அமுதாரெட்டிகண்டிகை ஏரியும் உள்ளன.
ஸ்ரீகாளிகாபுரம் ஏரியின் உபரிநீர், செல்லாத்தம்மன் கோவில் முன்பாக பாய்ந்து சென்று அமுதாரெட்டி கண்டிகை ஏரியை அடைகிறது.
இந்நிலையில், ஏரியின் உபரிநீர், கோவில் முன்பாக உள்ள சிமென்ட் சாலையில் தேங்கி நிற்கிறது.
இரண்டு மாதங்களாக இந்த நிலை நீடிக்கிறது. ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதை வசதி இன்றி தவிக்கின்றனர். உபரிநீர் செல்ல கால்வாய் அமைக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.