/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மீன்பிடி தொழிலில் பிரச்னை பேச்சுவார்த்தையில் உடன்பாடு மீன்பிடி தொழிலில் பிரச்னை பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மீன்பிடி தொழிலில் பிரச்னை பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மீன்பிடி தொழிலில் பிரச்னை பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மீன்பிடி தொழிலில் பிரச்னை பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ADDED : மார் 22, 2025 11:42 PM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் மற்றும் அதை ஒட்டிய ஆந்திர பகுதியில், மொத்தம் 29 மீனவ கிராமங்கள் உள்ளன. இரு மாநில மீனவர்களும் சேர்ந்து, ஆந்திரா மற்றும் தமிழக மீனவர் சங்கம் ஒன்றை ஏற்படுத்தி, பழவேற்காடு ஏரியில் ஒற்றுமையாக மீன்படி தொழில் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும், 25ம் தேதி வரை மட்டுமே மீன்படி தொழிலில் ஈடுபடுவர். மீன் வளத்தை பெருக்கும் நோக்கில், சங்கம் சார்பில், எஞ்சியுள்ள மாத கடைசி நாட்களில் மீன் பிடிக்க தடைவிதித்து, அதை அனைத்து மீனவ கிராமத்தினரும் முறையாக கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் தொழிலுக்கு செல்லாத மாத கடைசி நாட்களில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்புகுளம் மற்றும் ஓபசமுத்திரம் கிராமங்களில், மீனவர் அல்லாத சமூகத்தை சேர்ந்தவர்கள் மீன்பிடித்து வருதால், மீன்வளம் பாதிக்கப்படுகிறது என, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில், ஆந்திர - தமிழக மீனவர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவில், மீனவர் அல்லாத சமூகத்தினர், மாத கடைசி நாட்களில் மீன்பிடி தொழிலுக்கு செல்லமாட்டோம் என, உறுதி அளித்ததால் சுமுக தீர்வு எட்டப்பட்டது.