/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவி மையம் அமையும்: எம்.பி., குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவி மையம் அமையும்: எம்.பி.,
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவி மையம் அமையும்: எம்.பி.,
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவி மையம் அமையும்: எம்.பி.,
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவி மையம் அமையும்: எம்.பி.,
ADDED : மார் 22, 2025 11:42 PM
திருவள்ளூர், ''கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தடுக்க, உதவி மையம் அமைக்கப்படும்,'' என, 'திஷா' தலைவர் மற்றும் காங்., எம்.பி., தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், காங்., - எம்.பி., சசிகாந்த் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன் - திருவள்ளுர், கிருஷ்ணசாமி - பூந்தமல்லி, சுதர்சனம் - மாதவரம், கோவிந்தராஜன் - கும்மிடிப்பூண்டி, துரைசந்திரசேகர் - பொன்னேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சசிகாந்த் பேசியதாவது:
மாவட்டத்தில் நீண்டநாள் கோரிக்கையான, சென்னையைச் சுற்றியுள்ள 'பெல்ட்' ஏரியாவில் இலவச வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கையால், 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை கிடைக்க வாய்ப்புள்ளது.
வரும் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுபாட்டை தடுக்க, உதவி மையம் அமைத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், எஸ்.பி., சீனிவாச பெருமாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட வன அலுவலர் சுப்பையா, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.