/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அரசு பள்ளி எதிரே ஆபத்தான டிரான்ஸ்பார்மர்அரசு பள்ளி எதிரே ஆபத்தான டிரான்ஸ்பார்மர்
அரசு பள்ளி எதிரே ஆபத்தான டிரான்ஸ்பார்மர்
அரசு பள்ளி எதிரே ஆபத்தான டிரான்ஸ்பார்மர்
அரசு பள்ளி எதிரே ஆபத்தான டிரான்ஸ்பார்மர்
ADDED : பிப் 11, 2024 11:15 PM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கணேசபுரம் கிராமம். இங்கு அரசு துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஒருங்கிணைந்த பள்ளிவளாகத்தில் இயங்கி வருகிறது.
இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி எதிரே டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு மின்விபத்து நிகழ்ந்தால் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் மாணவர்கள் விளையாட்டுத்தனமாக டிரான்ஸ்பார்மர் மீது கல் வீசினால் விபத்து நிகழும் அபாயம் உள்ளது.
எனவே மாற்று இடத்தில் அமைக்க மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.