/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வழிமாறி திருவாலங்காடில் தவிக்கும் கருங்கால் சாம்பல் மந்தி குரங்கு வழிமாறி திருவாலங்காடில் தவிக்கும் கருங்கால் சாம்பல் மந்தி குரங்கு
வழிமாறி திருவாலங்காடில் தவிக்கும் கருங்கால் சாம்பல் மந்தி குரங்கு
வழிமாறி திருவாலங்காடில் தவிக்கும் கருங்கால் சாம்பல் மந்தி குரங்கு
வழிமாறி திருவாலங்காடில் தவிக்கும் கருங்கால் சாம்பல் மந்தி குரங்கு
ADDED : ஜூன் 16, 2025 02:19 AM

திருவாலங்காடு, ஜூன் 16---
கனகம்மாசத்திரம் ---- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, காட்டுகாளியம்மன் கோவில் எதிரே உள்ள சாலையில், நேற்று மதியம் கருங்கால் சாம்பல் மந்தி குரங்கு ஒன்று சுற்றித்திரிந்தது.
ஆந்திர வனப்பகுதியில் இருந்து வழிமாறி, திருவாலங்காடு பகுதியில் சுற்றித்திரிவதாக பகுதிவாசிகள் கூறுகின்றனர். குரங்கை காண்போர் 'செல்பி' எடுக்க துரத்துவதால், சாலையில் அங்கும் இங்குமாக ஓடுகிறது.
இப்பகுதியில் கனகம்மாசத்திரம் ---- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர் - ---அரக்கோணம் நான்கு வழிச்சாலைகளில் அதிகப்படியான வாகனங்கள் சென்று வரும் நிலையில், குரங்கு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, திருத்தணி வனத்துறையினர், கருங்கால் சாம்பல் மந்தி குரங்கை மீட்டு, வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.