/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கால்நடை சிறப்பு முகாமில் 865 மாடுகளுக்கு சிகிச்சை கால்நடை சிறப்பு முகாமில் 865 மாடுகளுக்கு சிகிச்சை
கால்நடை சிறப்பு முகாமில் 865 மாடுகளுக்கு சிகிச்சை
கால்நடை சிறப்பு முகாமில் 865 மாடுகளுக்கு சிகிச்சை
கால்நடை சிறப்பு முகாமில் 865 மாடுகளுக்கு சிகிச்சை
ADDED : ஜூன் 30, 2025 11:14 PM

திருவாலங்காடு, திருவாலங்காடு அருகே நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில், 865 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவாலங்காடு ஒன்றியம் குப்பம்கண்டிகையில், திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் தாமோதரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, கால்நடை உதவி மருத்துவர்கள் ருத்ரா, பிரியாலட்சுமி உள்ளிட்டோர், 865 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில், 112 பசுக்கள், 94 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், 415 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 46 பசுவிற்கு செயற்கை கருவூட்டல், 198 கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசிகள் உட்பட, மொத்தம் 865 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு, கால்நடை உதவி இயக்குநர் தாமோதரன் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் தாது உப்பு பாக்கெட்டுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், கால்நடை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.